தெரு நாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பது தடை செய்யப்படுகிறது – உச்ச நீதிமன்றம்.!

அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் உள்ள தெரு நாய் விவகார வழக்குகள் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றபட்டுள்ளது.

Supreme Court stray dog

டெல்லி :தெரு நாய்கள் தொடர்பான பிரச்சினைகளை ஒருங்கிணைத்து விசாரிக்கும் வகையில், இந்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தெரு நாய்கள் விவகாரத்தில் நாடு முழுவதும் பொருந்தக் கூடிய ஒட்டுமொத்த வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்படுத்தப்படும்.

இது தொடர்பாக அனைத்து மாநிலங்களும் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து ஆகஸ்ட் இன்று வெளியான தீர்ப்பில், தெரு நாய்களைப் பிடித்து கருத்தடை ஊசி மற்றும் உரிய தடுப்பூசிகள் செலுத்தி மீண்டும் தெருவிலேயே விடலாம்.

ஆக்ரோஷமான, ரேபிஸ் போன்ற நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட நாய்களை மீண்டும் தெருவில் விடாமல் காப்பகத்தில் தனியாக அடைத்து வைக்க வேண்டும். தெருக்களில் நாய்களுக்கு உணவளிக்க தனி இடத்தை ஏற்படுத்த வேண்டும். பொது இடங்களில் உணவளிக்கக் கூடாது.

மேலும், தலைநகர் டெல்லியில் தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க உத்தரவிடப்பட்டிருந்தாலும், விலங்கு நல ஆர்வலர்களின் எதிர்ப்பு மற்றும் மேல்முறையீடு காரணமாக, இந்த உத்தரவு மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு இந்த விவகாரத்தை விசாரித்து வருகிறது, மேலும் தேதி குறிப்பிடப்படாமல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.