பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் : மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

Central Defense Minister Nirmala Seetharaman was present at the event held on behalf of the Central Division of Medical Services Department of Women's Department in New Delhi. Minister Nirmala Seetharaman said, 'Women are in the race to overcome the situation prevailing against women in India. So they have achieved great success and reach the peak of life. More and more women will be appointed in the field of defense at the time of consideration.

டெல்லியில் மத்திய பாதுகாப்பு துறையின் மருத்துவ பிரிவு பெண் அதிகாரிகள் அமைப்பின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார்.

அப்போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், இந்தியாவில் நிலவும் பெண்களுக்கெதிரான பல்வேறு சூழ்நிலைகளை சமாளித்து பெண்கள் வெற்றி பாதையில் பயணம் செய்கின்றனர். எனவே அவர்கள் சிறப்பான வெற்றியை பெற்று வாழ்வில் உச்ச நிலையை அடைகின்றனர். மேலும் இதை கருத்தில் கொண்டு வரும் காலங்களில் பாதுகாப்பு துறையில் இன்னும் அதிகளவில் பெண்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.