சிலிண்டர் விலை குறைப்பு..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

Commercial cylinder

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதில், பெட்ரோல், டீசல் விலைகளை தினசரியும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகளை மாதத்திற்கு இருமுறையும் நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு மாதமும்எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயித்து வருகின்றன.

இதுபோன்று, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, கடந்த நவம்பர் 1ம் தேதி சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை 1,898 ரூபாயில் இருந்து 101 ரூபாய் உயர்ந்து. 1,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.

மீண்டும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை! அமைச்சர் செந்தில் பாலாஜியின் நிலை என்ன?

இந்த நிலையில், 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. அதாவது, சென்னையில்  1999.50 ரூபாய்க்கு விற்கப்பட்ட 19 கிலோ எடையுள்ள வணிக சிலிண்டரின் விலை 57 ரூபாய் குறைந்து, 1,942 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும், வீட்டு உபயோக சிலிண்டரின் விலை எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து 918.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த விலை உயர்வு, குறைவு டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற நகரங்களுக்கு ஏற்பட மாறுபடும். இதனிடையே, நாட்டில் சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம், தெலுங்கானா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.

இதனால் சிலிண்டர் விலை உள்ளிட்டவைகளை மத்திய பாஜக குறைத்து வருகிறது என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகிறது.  அதுமட்டுமில்லாமல்,  சமையல் சிலிண்டருக்கான மானியம் விரைவில் உயர்த்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. பொதுத்தேர்தல் நடக்கப்போவதால், கேஸ் சிலிண்டருக்கான மானியம், மறுபடியும் உயர வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்