கரும்பு கொள்முதல் விலையை 8% உயர்த்திய மத்திய அரசு ..!

modi

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அதன்படி கரும்பு குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். இதனால் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு 2024-25ம் ஆண்டில் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.340 என நிர்ணயம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட கொள்முதல் விலை வரும் அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவித்தார்.

கடந்த ஆண்டு கரும்பு குவிண்டாலுக்கு ரூ.315 ஆக இருந்தது. இந்த ஆண்டு குவிண்டால் ரூ.340 ஆக அதிகரித்துள்ளது. இந்த முறை குவிண்டாலுக்கு ரூ.25 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கொள்கையால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறுவார்கள் என கூறினார்.   உலகிலேயே கரும்புக்கு இந்தியா தான் அதிக விலை கொடுத்து வருகிறது. இந்த ஆண்டும் மோடி அரசு 8% உயர்த்த முடிவு செய்துள்ளது.

பிரதமர் திறந்து வைத்த இந்தியாவின் மிக நீளமான ரயில் சுரங்கப்பாதை.. முக்கிய அம்ங்கள்.!

உலகம் முழுவதும் உரங்களின் விலை உயர்ந்தாலும், விவசாயிகளை பாதிக்க விடாமல், 3 லட்சம் கோடி ரூபாய் வரை மானியம் கொடுத்தோம். விவசாயிகளுக்கு நியாயமான மற்றும் லாபகரமான விலையில் கரும்பு விலை நிர்ணயம் செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ள இந்த நேரத்திலும், அனைத்து பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தும் நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கரும்பு கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்