காஷ்மீர் தாக்குதல் : பிபிசி தொலைக்காட்சி மீது மத்திய அரசு அதிருப்தி.!

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களை பயங்கரவாதிகள் என்பதற்கு பதிலாக போராளிகள் என குறிப்பிட்டதால் நோட்டீஸ் அனுப்பட்டுள்ளது.

BBC coverage of Kashmir attack

டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக பிபிசி இந்தியாவில் விமர்சனங்களை எதிர்கொள்கிறது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என மத்திய அரசு குற்றம் சாட்டி பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது

இந்த நிலையில், பிபிசி இந்தியத் தலைவர் ஜாக்கி மார்ட்டினுக்கு எழுதிய கடிதத்தில், ”ஊடகங்கள் தங்கள் செய்திகளில் “பயங்கரவாதிகள்” என்பதற்குப் பதிலாக “போராளிகள்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு அதிருப்தி தெரிவித்துள்ளது.

மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் எதிர்காலத்தில் நடந்துகொள்ள வேண்டாம் என பிபிசி தலைமைக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிபிசியின் உள்ளடக்கம், செய்தி வெளியீட்டை சம்பந்தப்பட்ட அமைச்சகம் கண்காணிக்கும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ‘Dawn News’ உள்ளிட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த 16 யூடியூப் சேனல்களுக்கு இந்தியாவில் தடை மத்திய அரசு உத்தரவிடப்பட்டது. வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், சமூக பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோ வெளியிட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
Rajasthan Royals vs Mumbai Indians
Mr. Subramanian
csk dhoni
Chennai Super Kings vs Punjab Kings ipl
retro
Chennai Super Kings vs Punjab Kings