சூரப்பாவை விசாரிக்க குழு அமைத்த முதல்வர்! முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்!

In the Surappa affair, Governor Banwarilal Rohit protested against the formation of the Tamil Nadu Government Committee

சூரப்பா விவகாரத்தில், தமிழக அரசு குழு அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் பன்வாரிலால் ரோகித்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா  மீதான புகார் குறித்து விசாரிக்க, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், குழு ஒன்றை  அமைத்துள்ளார். தமிழக முதல்வர் அமைத்துள்ள குழுவிற்கு, ஆளுநர் பன்வாரிலால் ரோகித் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆளுநர் பன்வாரிலால் ரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில்,  தனக்கு தெரியாமல் அரசு குழு அமைத்து விட்டதாகவும், அரசு குழு அமைத்தது நியாயமற்றது என்றும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார். மேலும், கலையரசன் தலைமையிலான குழு விசாரணையை நிறுத்த வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பிய கடிதத்திற்கு, தமிழக அரசு தரப்பில் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை.