புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கி வைத்தார் முதல்வர் நாராயணசாமி!

In Puducherry, Chief Minister Narayanasamy has started the corona vaccination drive and the first vaccine has been given to Munusamy.

புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார். முதல் கொரோனா தடுப்பூசி, மருத்துவ பணியாளர் முனுசாமி அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோன வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது மக்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிற நிலையில், புதுச்சேரியில், கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் நாராயணசாமி அவர்கள் துவங்கி வைத்தார்.

புதுச்சேரியில், முதல் கொரோனா தடுப்பூசி, மருத்துவ பணியாளர் முனுசாமி அவர்களுக்கு போடப்பட்டுள்ளது.