உத்தர பிரதேசத்தில் காருக்குள் 4 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென கார் கதவு லாக் ஆனதால், அதில் 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், மொராதாபாத்தில் உள்ள முந்தா பாண்டே பகுதியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். அதில் 5-7 வயதான 4 குழந்தைகள் காருக்குள் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த கார் கதவு, திடீரென லாக் ஆனது. அப்பொழுது காருக்கு இருந்த குழந்தைகள் காரை திறக்க முயற்சி செய்தனர். ஆனால் கார் கதவு திறக்கவில்லை.
காருக்குள் சிக்கிய அந்த குழந்தைகள், சில நிமிடங்களில் மூச்சுத்திணறி மயங்கினர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், காருக்குள் இருந்த குழந்தைகளை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதில் இரண்டு குழந்தைகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற இரண்டு குழந்தைகளும் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குழந்தைகள் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…