சீனாவின் சிச்சுவான் ஏர்லைன்ஸ் அடுத்த 15 நாட்களுக்கு இந்தியாவுக்கு வரும் அனைத்து சரக்கு விமானங்களுக்கும் நிறுத்தியுள்ளது.
இந்தியாவில் கடுமையான ஆக்ஸிஜன் மற்றும் வென்டிலேட்டர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள இந்த நேரத்தில் இந்தியாவுக்கு எதிராக சீனாவின் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளது. சீன அரசுக்கு சொந்தமான சிச்சுவான் ஏர்லைன்ஸ் இந்தியாவுக்கான சரக்கு விமானங்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
இது தடுப்பூசிகள், மருந்துகள் மற்றும் பிற மருத்துவ சாதனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்களின் ஏற்றுமதியை பாதிக்கும் என கூறப்படுகிறது. சிச்சுவான் ஏர்லைன்ஸின் துணை நிறுவனமான சிச்சுவான் சுவான்ஹாங், சீனாவின் சியான் நகரிலிருந்து டெல்லி உட்பட ஆறு நகரங்களுக்கான விமானங்களை நிறுத்தி வைப்பதாக விற்பனை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது.
சீனாவிலிருந்து ஆக்ஸிஜன் கொண்டுவர முயற்சி செய்த நிலையில் சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கொரோனா இந்தியாவில் அதிகம் பரவி வருவதால் கொரோனா சீனாவில் பரவாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது என்று அந்த கடிதத்தில் அந்த விமான நிறுவனம் விளக்கமளித்தது. இந்தியாவுக்கான வழிகள் மிக முக்கியமானவை என்றும் சேவையை நிறுத்தி வைப்பது பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போதைய நிலைமையை வர்த்தகர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாக சீனா கூறியது. இந்தியாவில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்ததால் சீனாவின் நடவடிக்கை வருந்தத்தக்கது என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். நேரடி விமானங்களை நிறுத்தி வைப்பதன் மூலம், சிங்கப்பூர் வழியாக இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இது தாமதத்திற்கு வழிவகுக்கும் என்று வர்த்தகர்கள் கூறினார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…