பாகிஸ்தான் , வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை இந்தியா வந்து தங்கிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்படும் என இரண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக கூறிருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 எம்.பிக்களும், எதிராக 80 எம்.பிக்களும் வாக்களித்தனர்.இதை தொடர்ந்து மக்களவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று மாநிலங்கவையில் அமித்ஷா குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்ய உள்ளார். மாநிலங்கவையில் இந்த மசோதா நிறைவேற்ற 121 எம்.பிக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்.
மாநிலங்கவையில் மொத்தம் 245 இடங்களில் தற்போது 5 இடங்கள் காலியாக இருப்பதால் 240 எம்.பிக்கள் உள்ளனர். இந்த சூழ்நிலை காங்கிரஸ், திமுக , திரிணாமுல் காங்கிரஸ், சமாஜவாதி போன்ற கட்சிகளை சார்ந்த எம்பிக்கள் 112 பேர் உள்ளனர்.
பாஜக ,அதிமுக , பாமக மற்றும் ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சார்ந்த 128 எம்பிக்கள் உள்ளனர். எனவே குடியுரிமை சட்டத் திருத்த மசோதா மாநிலங்கவையில் எளிதாக நிறைவேற வாய்ப்பு உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…