சந்திரயான் -3 விண்கலம் மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிறைவு என இஸ்ரோ தகவல்.
சந்திராயன்-3 விண்கலம் நேற்று 2-வது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்த்தப்பட்ட நிலையில், அதனை மேற்கொண்டு உயர்த்தும் பணியில் இன்று மூன்றாவது சுற்றுப்பாதைக்கு உயர்த்தும் முயற்சி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது என இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. கடந்த ஜூலை 14 ஆம் தேதி, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சந்திராயன்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்நிலையில் இஸ்ரோ தனது ட்விட்டரில், சந்திராயன்-3 விண்கலம் தற்போது நிலவுக்கு இன்னும் நெருக்கமாக சென்றுள்ளது என பதிவிட்டுள்ளது. இரண்டாவது சுற்றுப்பாதைக்கு 226 கிமீ தொலைவில் பூமியின் சுற்றுவட்டப்பாதையில் சந்திராயன்-3 விண்கலம் உயர்த்தப்பட்ட நிலையில், மூன்றாவது சுற்றுப்பாதையில் சந்திராயன்-3 உயர்த்தப்பட்டுள்ளது.
unknown nodeஅடுத்தகட்ட பணி ஜூலை 20 ஆம் தேதி பிற்பகல் 2-3 மணிக்குள் சந்திராயன்-3 விண்கலம் மேலும் உயர்த்தப்படும் என இஸ்ரோ மேலும் தெரிவித்துள்ளது.
