கமாண்டர் மசூத் சுட்டுக்கொலை.! பயங்கரவாதிகள் இல்ல மாவட்டமாக மாறிய தோடா.!

காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  குல்சோஹர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல்

காஷ்மீர் மாநிலம் ஆனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள  குல்சோஹர் பகுதியில் இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் என்ற  பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் மசூத் உள்ளிட்ட 3 பேர்  சுட்டு கொல்லப்பட்டனர்.

இது குறித்து டிஜிபி  தில்பாக் சிங் கூறுகையில், இன்று நடந்த மோதலில் கமாண்டர் மசூத் மற்றும் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். இதனால், தோடா மாவட்டம் பயங்கரவாதி இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது. தோடா மாவட்டத்தை சேர்ந்த மசூத் மீது பாலியல் வழக்கு உள்ளது.

தலைமறைவாக இருந்த மசூத் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து காஷ்மீர் பகுதியில் செயல்பட்டு வந்தான் என தெரிவித்தார்.