யூடியூப் சேனல்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை- உச்சநீதிமன்றம் ..!

The Supreme Court has said it is concerned that YouTube channels are publishing false news on news websites.

யூடியூப் சேனல்கள் செய்தி இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

நிஜாமுதீன் மார்காஸ் விவகாரம் மதவாதம் ஆக்கப்படுவதை தடுக்கக் கோரி, ஜமி அத்- உலேமா- ஏ- ஹிந்த் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, யூடியூப் சேனல்கள் செய்தி இணையத்தளங்களில் பொய்யான செய்திகள் வெளியிடுவது கவலை அளிப்பதாக தெரிவித்தார்.

அதிகாரமிக்கவர்களின் கருத்துக்களை மட்டுமே அவை எதிரொலிப்பதாகவும், நீதிமன்றங்கள், நீதிபதிகளுக்கு எதிரான கருத்துக்கள் பதிவிடுவதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற யூடியூப் சேனல்களை முறைப்படுத்த மத்திய அரசு என்ன முயற்சி எடுத்து வருகிறது..? என கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் இவை கையாளப்படும் என கூறினார்.