மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கட்டாயத்தின் பேரில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் ஆதரித்தன.! பிரதமர் மோடி

மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக போபாலில் பாஜக தொண்டர்களின் ‘காரியகர்த்தா மகாகும்பம்’ என்ற மாபெரும் நிகழ்ச்சி

PMModi

மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள நிலையில் மக்களிடம் தொடர்பு ஏற்படுத்தும் விதமாக போபாலில் பாஜக தொண்டர்களின் ‘காரியகர்த்தா மகாகும்பம்’ என்ற மாபெரும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் கலந்து கொண்டு உரையாற்றி வரும் பிரதமர் மோடி, காங்கிரஸை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். அதன்படி, நாட்டை 20 ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்ல காங்கிரஸ் விரும்புகிறது. காங்கிரஸ் தனது நலனுக்காக மக்களை ஏழைகளாக வைத்திருந்தது. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கட்டாயத்தின் பேரில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரித்தன என்று கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், “ஏழைகள், பெண்கள், சுரண்டப்பட்டோர் மற்றும் தாழ்த்தப்பட்டோர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி ஆகியோரை வளர்ச்சியின் மிகப்பெரிய பயனாளிகளாக பாஜக உருவாக்கியது. மோடியால் தாழ்த்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னுரிமை உத்தரவாதம் ஒன்றன் பின் ஒன்றாக நிறைவேற்றப்பட்டுள்ளது.”

“மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாட்டில் புதிய வரலாறு படைத்தது. நாட்டின் பெண்கள் பல தசாப்தங்களாக காத்திருந்தனர், அது ஒருபோதும் செய்யப்படாது என்றும் கூறப்பட்டது. ஆனால் மோடி இருக்கும் போது நிறைவேற்றப்படும் ஒவ்வொரு உத்தரவாதத்திற்கும் உத்தரவாதம் உண்டு. இருந்தாலும், இந்தியப் பெண்களை நான் எச்சரிக்க விரும்புகிறேன்.”

“காங்கிரஸும் அதன் புதிய ‘திமிர்பிடித்த’ (ghamandiya) கூட்டணியும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை, அரை மனதுடன் கட்டாயத்தின் பேரில் ஆதரித்தன. கடந்த ஒன்பது ஆண்டுகளில், இந்தியப் பெண்கள் அதிகாரம் பெற்ற விதத்தில், பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை எதிர்க்கும் தைரியம் இந்தக் கட்சிகளுக்கு இல்லை.” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.