பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது.
கர்நாடக மாநில தேர்தலில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசு வெடித்து கொண்டாடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக தேர்தலில், காங்கிரஸ் தனி பெரும்பான்மையுடன் வெற்றி என்ற நிலையில் இருப்பதை, அடுத்து ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாளை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுவதாக காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.
வெற்றி முகத்தில் காங்கிரஸ் கட்சி இருப்பதால், கர்நாடக உள்ளிட்ட நாடு முழுவதும் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். தற்போது, காங்கிரஸ் 124 இடங்களிலும், பாஜக 69 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகிறது.
கர்நாடகா தேர்தலில் ஆளும் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில், பாஜக தலைமை அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. கர்நாடகா சட்டமன்றத் தேர்தல் பின்னடைவு காரணமாக தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகம் ஆட்கள் யாரும் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வழக்கமாக இனிப்புகள் வழங்குவது யாகம் செய்வது என உற்சாகம் மிகுந்து இருக்கும். ஆனால், தற்போது ஆள் நடமாட்டம் இல்லாமல் உள்ளது.
