காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது – மோடி

காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு.

காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் விஜய் சங்கல்ப யாத்ரா நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், காங்கிரஸ் எனக்கு குழி தோண்டுவது போல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. மக்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி வருகிறது. கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சி நிலையான பாஜக அரசு தேவை.

சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக மாநிலத்தை பாதித்துள்ளது. கர்நாடகாவில் மீண்டும் இரட்டை எஞ்சின்  கொண்ட பாஜக அரசை அமர்த்த மக்கள் முடிவு செய்துள்ளனர். தாமரையை மலர வைக்க மக்கள் முடிவு செய்தது காங்கிரசுக்கு தெரியாது என  தெரிவித்துள்ளார்.