மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி..!

மறைந்த கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு காங்கிரஸ் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
கேரளா முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி இன்று அதிகாலை பெங்களூருவில் உயிரிழந்தார். 79 வயதான இவர் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் உள்ள தனது மகன் கண்காணிப்பில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உம்மன் சாண்டி காலமானார். இந்நிலையில் கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜான் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள வராது உடலுக்கு காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அதன்படி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உட்பட பல தலைவர்கள் மறைந்த முன்னாள் கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
Congress Parliamentary Party Chairperson Sonia Gandhi, Congress president Mallikarjun Kharge, and party leader Rahul Gandhi paid last respects to former Kerala CM Oommen Chandy, in Bengaluru.
(Pics: Karnataka Pradesh Congress Committee) https://t.co/sBEdeAOeZm pic.twitter.com/Say0VC2wmT
— ANI (@ANI) July 18, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025