தொடரும் இழுபறி.. கர்நாடக முதல்வர் யார்.? இன்று இறுதி முடிவை எடுக்கும் காங்கிரஸ் தலைவர் கார்கே.!

Mallikarjun Kharge

கர்நாடகா முதல்வர் யார் என்பதை உறுதி செய்ய இன்று சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியுடன் ஆலோசித்து இறுதி முடிவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்க உள்ளார்.

கர்நாடகா தேர்தல் முடிந்து கடந்த 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்று காங்கிரஸ் 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. ஆனால் இன்னும் முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைமை அறிவிக்காமல் இருந்து வருகிறது.

கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கு முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கும் காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. கடந்த ஞாயிற்று கிழமை புதியதாக வென்ற எம்எல்ஏக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நேற்று காங்கிரஸ் தலைமையுடன் ஆலோசிக்க சித்தராமையா டெல்லி சென்றார். அதே போல டி.கே.சிவகுமாருக்கு உடல் நிலை சரியில்லை என்பதால் அவருக்கு பதிலாக அவரது சகோதரர் டெல்லி சென்று காங்கிரஸ் தலைமை உடன் ஆலோசித்தார். இதனை அடுத்து இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்தி உடன் ஆலோசனை நடத்தி இறுதி முடிவை அறிவிப்பார் என கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைமை உடன் ஆலோசித்த டி.கே.சிவகுமார் சகோதரர்,இன்று டி.கே.சிவகுமார் டெல்லிக்கு வரவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்