காங்கிரஸ் மூத்த தலைவர் மோதிலால் வோரா காலமானார்!

Motilal Vora, a senior Congress leader and state MP, has passed away at the age of 93 due to corona disease in delhi.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மோதிலால் வோரா. 93 வயதாகும் இவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மோதிலால் வோரா, இன்று மதியம் டெல்லியில் உயிரிழந்தார். அவரின் மறைவிற்கு காங்கிரஸ் கட்சியினர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.