பீகாரில் உள்ள 243 தொகுதிகளில் அக்டோபர் 28-ம் தேதி 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பணிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ராஷ்ட்ரிய ஜனதாதள தலைவர் தேஜஸ்வி யாதவ் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, பீகார் சட்டமன்றத்தில் 243 இடங்களில் ராஷ்டிரிய ஜனதா தளம் 144 இடங்களிலும், காங்கிரஸ் 70 இடங்களிலும், இடது கட்சிகள் 29 இடங்களிலும் போட்டியிடும்.
அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 4 இடங்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6, சிபிஐ எம்எல் கட்சி 19 போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.