சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம்!

The working committee meeting, chaired by Sonia Gandhi, the interim leader of the Congress party in Delhi, began via video.

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி வாயிலாக தொடங்கியது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியை சந்தித்தததையடுத்து அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதனையடுத்து அக்கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். இந்தநிலையில், டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் காரியக் கமிட்டி கூட்டம், காணொலி வாயிலாக தொடங்கி, நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், உட்கட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி, தேர்தல் கால அட்டவணையை இறுதிப்படுத்தவுள்ளதாகவும், அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடத்தும் தேதி இறுதிசெய்யப்படவுள்ளது குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.