காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாளில் விடுமுறை.. புதுச்சேரி அமைச்சர் அதிரடி அறிவிப்பு

புதுச்சேரி காவலர்களுக்கு முக்க்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

புதுச்சேரி காவலர்களுக்கு முக்க்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு.

புதுச்சேரியில் காவலர்களுக்கு பிறந்தநாள், திருமண நாள் உள்பட முக்கிய நிகழ்வுகளுக்கு விடுமுறை தரப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். இதுபோன்று பெண் காவலர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும், புதுச்சேரி காவல்துறையில் 786 பணியிடம் நிரப்படும் என்றும்  போதைப்பொருளை தடுக்க குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்பட்டாலும் அரசு தரும் மானியம் தொடரும் எனவும் அமைச்சர் பேரவையில் குறிப்பிட்டார்.