பிபார்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
பிபார்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்ட நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் குஜராத் முதல்வர் பூவேந்திர படேல், அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். புயல் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ள எட்டு தொகுதிகளின் எம்பிக்களும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
