#Breaking:மக்களே கவனம்..மீண்டும் எகிறிய கொரோனா பலி;ஒரே நாளில் இத்தனை பேரா?..!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,539 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,528  ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 10 குறைவு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,539 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,528  ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 10 குறைவு கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,04,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 60 ஆக குறைந்து இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 149 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,281 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,997 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,24,58,543 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று30,799ஆக இருந்த நிலையில்,தற்போது29,181ஆக குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை1,80,97,94,588கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 15,77,783தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.