நாட்டில் கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி கொரோனா பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் ஒரே நாளில் (கடந்த 24 மணிநேரத்தில்) புதிததாக 5,335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா நேற்று 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், இன்று 5 ஆயிரத்தை கடந்தது. கடந்த 5 மாதங்களில் இல்லாத அளவாக தினசரி பாதிப்பு 5 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23, 091-ல் இருந்து 25,587ஆக அதிகரித்துள்ளது.