கடந்த 24 மணி நேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா.. 805 பேர் உயிரிழப்பு!

The federal health ministry said 14,348 people had been confirmed infected with corona in a single day.

ஒரே நாளில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,348 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் கொரோனவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,42,46,157 ஆக அதிகரித்துள்ளது.

இதுபோன்று ஒரே நாளில் 805 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 4,57,191 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பதிப்பில் இருந்து இதுவரை 3,36,27,632 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,61,334 ஆக உள்ளது என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் நேற்று மட்டும் 74,33,392 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இதுவரை மொத்தம் நாடு முழுவதும் 1,04,82,00,966 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.