கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதித்த இருவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஓமிக்ரான் கொரோனா சில நாட்களில் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் பரவாமல் இருக்க மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு நடைமுறைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் ஓமைக்ரான் கொரோனா 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு தென் ஆப்பிரிக்காவில் இருந்து பெங்களூரு வந்த 66 மற்றும் 46 வயதான ஆண்கள் இருவருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இருவருடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கர்நாடகாவில் ஓமைக்ரான் பாதித்த இருவருடன் தொடரில் இருந்த 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்ட 5 நபர்களின் மாதிரிகள் ஓமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. எனவே மொத்தம் 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் யாரும் தீவிரமான அறிகுறிகளைக் காட்டவில்லை. இவர்கள் அனைவருக்கும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது என கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் கே சுதாகார் தெரிவித்தார். ஏற்கனவே 23 நாடுகளில் ஓமைக்ரான் பரவ துவங்கிய நிலையில், தற்போது இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…