கேரளாவில் 3வது நாளாக 30 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!

The number of infections in the state of Kerala has crossed 30,000 in the last 3 days.

கேரள மாநிலத்தில் கடந்த 3 நாட்களாக 30 ஆயிரத்தை கடந்து தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது.

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 ஆயிரத்து 801 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே, 30,007 ஆக இருந்த கொரோனா பாதிப்பு தற்போது, மூன்றாவது நாளாக 32,801 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவில் இருந்து 18,573 பேர் குணமடைந்த நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 179 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதால் தமிழக, கேரள எல்லைகளில் தீவிர கண்காணிப்பில் உள்ளன.