மீண்டும் எகிறும் கொரோனா;கடந்த ஒரே நாளில் 13,091 பேர் புதிதாக பாதிப்பு!

Corona increase again; 13,091 new cases in last one day!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை340  ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,44,01,670 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 13,091 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 1500 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,44,01,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 340 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,62,189 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 13,878  பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை  3,38,00,925 ஆக உயர்ந்துள்ளது.குணமடைந்தோர் விகிதம் தற்போது 98.25% ஆக அதிகரிப்பு.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,38,556 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.266 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 1,10,23,34,225 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 57,54,817 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.