#Breaking:இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 23,529 பேர் கொரோனாவால் பாதிப்பு..!

Corona rising again in India; 23,529 people affected in a single day ..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 311 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,37,39,980 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 23,529 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது நேற்றைய பாதிப்பை விட 4000 அதிகம்.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,37,39,980 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 311 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,48,062 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்றில் இருந்து ஒரே நாளில் 28,718 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,30,14,898 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2,77,020 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாடு முழுவதும் இதுவரை 88,34,70,578 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 65,34,306 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.