அதிகாரிக்கும் கொரோனா பரவல்...! ஒடிசாவில் மே- 5 முதல் 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்...!

The Odisha government has announced a 14-day curfew in the state from May 5 to May 19.

ஒடிசா அரசு, மே 5 முதல் மே 19 வரை மாநிலத்தில் 14 நாட்கள்  ஊரடங்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும்,  இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ள  நிலையில், இந்த வைரஸால் உயிரிழப்போரின் எண்ணிக்கை 3,500-ஐ கடந்துள்ளது. அந்த வகையில், ஒடிசாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து, ஒடிசா அரசு, மே 5 முதல் மே 19 வரை மாநிலத்தில் 14 நாட்கள்  ஊரடங்கை அமல்படுத்துவதாக தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், காலை 6 மணி முதல் 12 மணி வரை, தங்களது அத்தியாவசிய தேவைகளுக்காக மக்கள் அவர்களது வீடுகளில் இருந்து 500 கி.மீ வரை நடந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.