விவசாய போராட்டத்திற்காக சிங்கு எல்லை பகுதியில் பணியில் இருந்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா.!

Corona infection has been confirmed in two IPS officers who were on duty in the Singh border area for the farmers protest in Delhi.

டெல்லியில் விவசாய போராட்டத்திற்காக சிங்கு எல்லை பகுதியில் பணியில் இருந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா ,குஜராத் , உத்தரப்பிரதேசம் மற்றும் பல மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் 16-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு சிங்கு எல்லை பகுதியில் பாதுகாப்பு கொடுத்து வந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .

டெல்லியின் சிங்கு எல்லை பகுதியில் பணியில் ஈடுப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது .அதில் இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவரில் ஒருவர் டிசிபி கௌரவ் மற்றும் மற்றொருவர் கூடுதல் டிசிபி-யாக பணியாற்றி வந்த கன்ஷ்யம் பன்சால் என்று கூறப்படுகிறது . தற்போது இருவரும் அவர்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக டெல்லி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.