மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா.!

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக  பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக உள்ள சுரேஷ் அங்காடிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுரேஷ் அங்காடி,  இன்று எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நான் நன்றாக உள்ளேன். கடந்த சில நாட்களில் என்னுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும், அவர்களின் உடல்நிலையைபார்த்து கொள்ளவும் , ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

unknown node