#24 மணி நேரத்தில் -27,114 பேருக்கு கொரோனா!அமைச்சகம் அதிர்ச்சி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 27,114 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக  மத்திய சுகாதார அமைச்சகம்  தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவல்:-இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,93,802லிருந்து 8,20,916ஆக உயர்ந்துள்ளதாகவும், கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,95,513லிருந்து 5,15,386ஆக உயர்ந்துள்ளதாகவும்; கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 21,604லிருந்து 22,123ஆக உயர்ந்துள்ளதாகவும்  மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.