"கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வந்துவிடும்"- பிரதமர் மோடி!

Prime Minister Narendra Modi has said that the corona vaccine will be available soon in India in Mann ki Baat live.

கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை “மன் கி பாத்” நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றி வருகிறார். இந்த உரையில் நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா பாதிப்பு குறித்தும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து மக்களோடு உரையாற்றுவார். அதன்படி இன்று மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்பொழுது உரையாற்றிய அவர், கொரோனா பரவதொடங்கி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும், கொரோனா பரவலால் ஏற்படும் ஆபத்து குறித்து நாம் அனைவரும் கவனமுடன் இருக்கு வேண்டும் என தெரிவித்தார்.