கொரோனா வைரஸ் பாதிப்பு – மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Prime Minister Narendra Modi today held a video conference with all state chief ministers on the issue of corona virus infection and vaccination in the states.

கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் மாநிலங்களில் தடுப்புமருந்து வழங்குவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.

இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே பிரதமர் மோடி மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.கொரோனா பாதிப்பு குறித்தும், கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசிக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.