இந்தியாவில் கொரோனா பாதிப்பு 9352 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 324 ஆகவும் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 980 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.