இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1071ஆக உயர்வு .!பலி எண்ணிக்கை 29 ஐ எட்டியது.!

கொரோனா வைரஸ்  150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் பல நாடுகளில் நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து  கொண்டே வருகிறது.

கொரோனா வைரஸ்  150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.இதனால் பல நாடுகளில் நாளுக்கு நாள் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரித்து  கொண்டே வருகிறது.

unknown node

இந்தியாவில் கொரோனா  வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த  நாடு முழுவதும் 21 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழப்பின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகம்  பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா , கேரளா  உள்ளது. மகாராஷ்டிராவில் 193, கேரளா 194 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் கொரோனா வைரஸிலிருந்து 100 குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும்  கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,983 ஆக அதிகரித்துள்ளது. பாதித்தவர்களின் எண்ணிக்கை 722,664 ஐ எட்டியுள்ளது. இருப்பினும், வைரசால் பாதிக்கப்பட்ட 151,793பேர் குணமடைந்துள்ளனர்.