டெல்லியில் கொரோனா அறிகுறியுடன் ஒரே நாளில் 85 பேர் அனுமதி

டெல்லியில் ஒரே நாள் இரவில் மட்டும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று 1000-த்தை கடந்து வேகமாக பரவி கொண்டிருக்கிறது.அதன் வேகத்தை குறைக்க மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள லோக்நாயக் மருத்துவமனையில் நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் 85 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை லோக்நாயக் மருத்துவமனையில் 106 பேர் கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .