கொரோனா தடுப்பு நடவடிக்கை: மாநிலங்களுக்கு ரூ.11 ஆயிரம் கோடி.!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு, ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநிலங்களுக்கு, ரூ.11,092 கோடி பேரிடர் மேலாண்மை நிதி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் பல்வேறு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் மோசமாக காணப்படுகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால். அதனை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு முதற்கட்ட பேரிடர் மேலாண்மை நிதியாக ரூ.11,092 கோடி வழங்க ஒப்புதல் அளித்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா.