இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 258 ஆக அதிகரிப்பு.!

உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால்

உலக முழுவதும் சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் இதுவரைகொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதையை நிலவரப்படி 258ஆக அதிகரித்துள்ளது. இதில் 219 இந்தியர்கள் மற்றும் 39 வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 4 இந்தியர்கள் உட்பட ஒரு வெளிநாட்டவர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் 64 வயதுக்கு மேற்பட்டவர்கள் என குறிப்பிடப்படுகிறது.

இதையடுத்து 6,700க்கு மேற்பட்டோரை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 52, கேரளாவில் 40, உத்தரபிரதேசம் 24, டெல்லி 26, கர்நாடகா 15, தெலுங்கானா 19, ராஜஸ்தானில் 17, ஹரியானா 17, பேரும் கொரோனவால் பாதித்தித்துள்ளனர்.