டெல்லியில் புதிதாய் 425 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதையடுத்து, அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 9000ஐ நெருங்கவுள்ளது.
டெல்லியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இன்று ஒரே நாளில் 425 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அம்மாநிலத்தில் கொரோனா தொற்று உறுதியானோரின் எண்ணிக்கை 8895 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் டெல்லி மாநிலத்தில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு 3518 பேர் வீடு திரும்பிய நிலையில், 5254 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்தார்.
unknown node