கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர்…!

கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை விற்ற தம்பதியினர்.
உத்திரபிரதேசத்தில், கண்ணாஜ் மாவட்டத்தில் கார் வாங்குவதற்காக பிறந்த குழந்தையை ஒரு தம்பதியினர் தொழிலதிபருக்கு விற்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து குழந்தையின் தாய் வழி தாத்தா, திர்வா கோட்வாலி காவல் நிலையத்தை புதிதாக பிறந்த மகனை ஒரு தொழிலதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு விற்றுள்ளதாக அந்த குழந்தையின் பெற்றோர் மீது புகார் அளித்துள்ளார்.
தாத்தா, பாட்டி அவர்களின் புகாரின் அடிப்படையில், மூன்று மாத குழந்தையை குர்ஷாஹைகஞ்ச் சார்ந்த தொழில் அதிபருக்கு ஒன்றரை லட்சத்துக்கு, நான்கு சக்கர வாகனம் வாங்குவதற்காக விற்கப்பட்டது என்று போலீசார் அறிந்து கொண்டனர். மேலும், இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கோட்வாலி ஷைலேந்திர குமார் கூறுகையில், குழந்தை இன்னும் தொழிலதிபர் வசம்தான் உள்ளது. மேலும் அந்தப் பெண்ணையும் அவரது கணவரையும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025