ரிஷப் பந்த் ஓய்வெடுக்க முடிவதில்லை- குடும்பத்தினர் கவலை

ரிஷப் பந்த்-ஐ ஓய்வெடுக்க விடாமல், பார்வையாளர்கள் கூட்டம் அவரை வந்து பார்க்கின்றனர் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

ரிஷப் பந்த்-ஐ ஓய்வெடுக்க விடாமல், பார்வையாளர்கள் கூட்டம் அவரை வந்து பார்க்கின்றனர் என அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், மிகப்பெரிய கார் விபத்தில் சிக்கி தற்போது டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையின் ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இருப்பினும், 25 வயதான பந்த்-ஐச் சந்திக்க பார்வையாளர்களின் கூட்டம் வருவதால், அவர் ஓய்வெடுக்க முடிவதில்லை.

இது குறித்து பந்தின் குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர். பந்தைக் கவனித்துக் கொள்ளும் ஒரு மருத்துவக் குழு உறுப்பினர் கூறுகையில், ரிஷப் பந்த் பார்வையாளர்கள் அனைவரையும் சந்திப்பதால் அவர் தனது ஆற்றலை இழக்கிறார், மேலும் அவரால் விரைவில் குணமடைய முடியாது, இதனால் அவரைப் பார்க்க திட்டமிடுபவர்கள் இப்போதைக்கு அதைத் தவிர்த்துவிட்டு அவரை ஓய்வெடுக்க அனுமதிக்க வேண்டும் என கூறினார்.

அனில் கபூர், அனுபம் கேர், சக கிரிக்கெட் வீரர் நிதிஷ் ராணா, கான்பூர் எம்எல்ஏ உமேஷ் குமார், சில பிசிசிஐ அதிகாரிகள், டெல்லி மாவட்ட கிரிக்கெட் கூட்டமைப்பு (டிடிசிஏ) உறுப்பினர்கள் மற்றும் சில உள்ளூர் நிர்வாகிகள் உட்பட ஏராளமான பிரபலங்கள் விபத்துக்குப் பிறகு பந்தை சந்தித்துள்ளனர்.