மத்திய பிரதேசத்தில் சிஆர்பிஎப் வீரர் உடல் மரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நிலையில் ,அவர் தற்கொலை செய்துள்ளதாக காவல்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் காந்த்லா பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரரான ராஜீவ் பணியில் இருந்து விடுப்பில் இருந்து வந்துள்ளார். ஐந்து நாட்களுக்கு முன்பு காந்த்லா பகுதியில் உள்ள தனது சொந்த ஊரிற்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு மரத்தில் தூக்கில் தொங்கியபடி அவர் உடல் மீட்கப்பட்டது.இதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை ‘என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலை வழக்கு என்றும், இது குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தாக்கல் தெரிவித்துள்ளது.மேலும் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.