CUET UG 2023 நுழைவுத்தேர்வுக்கு இன்றிரவு முதல் மார்ச் 12-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என யுஜிசி தலைவர் அறிவிப்பு.
CUET-UG – இன்றிரவு முதல் விண்ணப்பிக்கலாம்:
unknown nodeமத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான CUET-UG நுழைவுத்தேர்வுக்கு இன்று இரவு முதல் விண்ணப்பிக்கலாம் என்றும் CUET-UG நுழைவுத்தேர்வுக்கு மார்ச் 12-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் எனவும் யுஜிசி தலைவர் அறிவித்துள்ளார்.
யுஜிசி தலைவர் ட்விட்டர் பதிவு:
unknown nodeஇதுதொடர்பாக யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமாரின் ட்விட்டர் பதிவில், CUET-UG 2023- இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்கு இன்றிரவு முதல் விண்ணப்பிக்கலாம்.CUET-UG நுழைவுத்தேர்வு நடைபெறும் நகரத்தின் அறிவிப்பு ஏப்ரல் 30 அன்று வெளியிடப்படும். அட்மிட் கார்டை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து மே 2வது வாரத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். இளங்கலைப் படிப்புகளுக்கான CUET UG நுழைவுத்தேர்வு மே 21 முதல் 31 வரை நடத்தப்படும்.
13 மொழிகளில் CUET (UG) நுழைவுத்தேர்வு:
CUET (UG) – 2023 13 மொழிகளில் அதாவது, ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடத்தப்படும். தேர்வர்களின் எண்ணிக்கை மற்றும் பாடத் தேர்வுகளைப் பொறுத்து 3 ஷிப்டுகளில் CUET (UG) – 2023 நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown nodeபிரிவு 1A – 13 இந்திய மொழிகள் உள்ளன, பிரிவு 1B இல் 20 பிற மொழிகள் உள்ளன, பிரிவு 2 27 டொமைன் பாடங்களைக் கொண்டுள்ளது. பிரிவு 3 – பொதுத் தேர்வு. ஒரு வேட்பாளர் மூன்று பிரிவுகளிலிருந்தும் அதிகபட்சம் 10 பாடங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
unknown nodeஇளங்கலைப் படிப்புகளுக்கான பொதுப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுக்குcuet.samarth.ac.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். CUET (UG) – 2023 க்கு இணையதளத்தில் “ஆன்லைன்” முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். CUET UG 2023க்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் ஏற்பட்டால், விண்ணப்பதாரர்கள் 011 – 40759000 / 011 – 69227700 அல்லது cuet-ug@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
unknown node