இன்றுடன் நிறைவுபெறும் ஊரடங்கு உத்தரவு ! பிரதமர் மோடி உரை

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடவுள்ளார். இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு

இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாடவுள்ளார்.இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது.இதற்குஇடையே அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொளி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியபோது பல மாநில முதலமைச்சர்கள் ஊரடங்கை நீடிக்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது.ஆனால் ஒடிஷா , பஞ்சாப் மஹாராஷ்டிரா,தமிழகம்,புதுச்சேரி மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிக்கபட்டுள்ளது.எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பிறப்பித்த ஊரடங்கு உத்தரவு இன்றுடன்  முடிவடையும் நிலையில்,இன்று  காலை 10 மணிக்கு மக்களிடையே உரையாற்ற உள்ளார் பிரதமர் மோடி.இந்த உரையின் போது ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட வாய்ப்பு உள்ளது.

.