டெல்லியில் மே-31 வரை ஊரடங்கு நீட்டிப்பு...! – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

Delhi Chief Minister Arvind Kejriwal has ordered a full curfew till May 31.

மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸின் 2-வது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், பல மாநிலங்களில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிற நிலையில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பொது முடக்கம் அமலில் இருக்கிறது.  இந்த நிலையில், நாளை காலை 5 மணியுடன் பொது முடக்கம் முடியவுள்ளது. இதனையடுத்து,  மே 31-ம் தேதி வரை முழு ஊரடங்கை நீடித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், பொது முடக்கத்திற்கு பின், அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் சற்று குறைந்துள்ளது. இந்நிலையில், மே 31ம் தேதி காலை வரை பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மே 31-ம் தேதிக்கு பின் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.