கொரோனா வைரஸின் தற்போதைய பரவல் தீவிரமானது அல்ல என்று சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தினந்தோறும் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகரித்தே வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் நேற்று 11,692 ஆக இருந்த கொரோனா பாதிப்பு ஒரே நாளில் இன்று 12,193 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக உயர்ந்துள்ளது.
இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் (எஸ்ஐஐ) தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா, கோவிட்-19 இன் தற்போதைய விகாரம் கடுமையாக இல்லை, எஸ்ஐஐ ஏற்கனவே ஐந்து முதல் ஆறு மில்லியன் டோஸ் கோவோவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய கோவிட்-19 ஒரு லேசான திரிபு மட்டுமே. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக, வயதானவர்கள் பூஸ்டர்களை பயன்படுத்தலாம், ஆனால் அதை எடுக்கலாமா வேண்டாமா என்பது அவர்களின் விருப்பம். ஐந்து முதல் ஆறு மில்லியன் டோஸ் கோவோவாக்ஸ் தடுப்பூசியை தயாரித்துள்ளது. அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதே அளவு கோவிஷீல்ட் டோஸ்களை நாங்கள் தயாரிப்போம், ”என்று பூனவல்லா கூறியுள்ளார்.