நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ஆகியோரிடம் கேட்டறிந்தார் பிரதமர் மோடி.தேவையான ஒத்துழைப்பும் உதவியும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, திங்கட்கிழமை அன்று, வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனையடுத்து, இந்த தாழ்வு மண்டலம் இன்று காலை நிவர் புயலாக உருவாகியுள்ளது.இதனை தடுக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமியிடம் கேட்டறிந்ததாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேலும் தேவையான ஒத்துழைப்பும் உதவியும் வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
unknown node